16 வயது சிறுமி வீட்டில் அடைத்து பலாத்காரம்.. தாயின் உடந்தையுடன் 2 பேர் பரபரப்பு செயல்.. தமிழகமே அதிர்ச்சி.!



theni-16-aged-minor-girl-rapped-police-arrest-3-culprit

வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த சிறுமியை கடத்தி 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், கயவர்களுக்கு ஆதராக அவர்களின் தாயே துணைநின்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. 

தேனி மாவட்டத்தில் உள்ள வனச்சாலை 3 ஆவது தெருவில் வசித்து வருபவர் ரஞ்சித். இவரின் நண்பர் பிரபு. இவர்கள் இருவரும் சுமைதூக்கும் தொழிலாளிகள் ஆவார்கள். இதே தெருவில் 10 ஆம் வகுப்பு வரை பயின்றுள்ள 16 வயது சிறுமி, அங்குள்ள கடையில் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தபோது, பிரபு சிறுமியிடம் பேசி வீட்டில் கொண்டு சென்று விடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால், சிறுமியின் வீட்டிற்கு செல்லாமல் பிரபு நண்பன் ரஞ்சித்தின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். 

Theni

அங்கு சிறுமியை அறையில் அடைத்து, கத்தி முனையில் அவரை ரஞ்சித் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொலை செய்திடுவோம் என மிரட்டவே, பயந்துபோன சிறுமியும் வீட்டிற்கு சென்று விஷயத்தை கூறாமல் இருந்துள்ளார். 

மறுநாள் குடும்ப சூழ்நிலையால் தனக்கு நடந்த கொடுமையை கூற முடியாமல் வேலைக்கு சென்ற சிறுமியை இடைமறித்த பிரபு, பலாத்கார வீடியோ தன்னிடம் உள்ளது. அதனை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன்., என்னுடன் வா என மிரட்டி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

பிரபு சிறுமியை அழைத்துச்செல்வதை பார்த்த சிலர், சிறுமியின் சகோதரருக்கு தகவலை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிறுமியின் தம்பி மற்றும் அவரின் பாட்டி பிரபுவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, சிறுமி எதுவும் தெரிவிக்க இயலாத சூழலில் இருக்க, சிறுமியை அவரின் தம்பி மற்றும் பாட்டியுடன் அனுப்பி வைத்துள்ளார். 

Theni

இந்த நிலையில், தனக்கு நடந்த கொடுமையால் மனதளவில் வருத்தத்தில் இருந்த சிறுமி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனைக்கண்டு பதறிப்போன பாட்டி விசாரித்தபோது உண்மை வெளிவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமியின் பாட்டி தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி ரஞ்சித் மற்றும் பிரபுவை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த பிரபுவின் தாய் பாப்பாவையும் (வயது 60) கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களின் மீது போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகள் தங்களுக்கு பாலியல் ரீதியாக அநீதி நிகழ்ந்தால் 1098 என்ற குழந்தைகள் நல அமைப்பு எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் அல்லது தகவல் தெரிவிக்கலாம். உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அதிகாரிகளால் பாதுகாக்கப்படும்.