தமிழகம் சினிமா

மார்ச் 1 முதல் திரையரங்குகளை மூட முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

Theaters closed from march 2020

பல்வேறு காரணங்களை வலியுறுத்தி கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்க உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

பெரிய நடிகர்களின் படங்கள் தோல்வியை சந்திக்கும்போது அதனால் திரையரங்க உரிமையாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சேர்ந்த அந்த நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டும் எனவும், படம் வெளியாகி 100 நாட்களுக்குள் அமேசான், நெட்பிலிக்ஸ் போன்ற டிஜிட்டல் தளங்களில் படங்களை வெளியிட கூடாது எனவும் கூறியுள்ளார்.

மேலும், தமிழக அரசின் 8% சதவீத மாநில வரியை வரும் பிப்ரவரி மாத்திற்குள் திரும்ப பெற வேண்டும் எனவும் இல்லையெனில் வரும் மார்ச் 1 முதல் திரையரங்குகள் மூடப்படும் எனவும் சக்தி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


Advertisement