மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய இளைஞர்கள்.. 7 பவுன் நகை பறிபோன சோகம்..!

மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய இளைஞர்கள்.. 7 பவுன் நகை பறிபோன சோகம்..!


The young people who showed their hand to the old woman.. The tragedy of losing 7 pounds of jewelry..!

பல்லடத்தை அடுத்த காளிவேலம்ப்பட்டியில் பழனிச்சாமி தனது மனைவி லட்சுமியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 82 வயதான லட்சுமி மளிகை பொருள் வாங்குவதற்காக அருகில் இருந்த கடைக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியே வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மூதாட்டி லட்சுமியிடம் வந்ததும் வாகனத்தை நிறுத்தி ஒரு முகவரிக்கு வழி கேட்டுள்ளனர். பின்னர் மூதாட்டி அவர்களுக்கு வழி சொல்லும் போது அந்த இளைஞர் லட்சுமி கழுத்தில் இருந்த 7 சவரன் தாலி சங்கிலியை பறித்து தப்பி சென்றுள்ளனர்.

Old woman chain

இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி லட்சுமி கத்தி கூச்சலிடுள்ளார். பின் பல்லடம் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.