வெளிநாட்டில் லட்சக்கணக்கில் சம்பளம்! வேலையை உதறிவிட்டு சட்டென ஊருக்கு வந்த இளைஞர்! யாருக்காக தெரியுமா?

வெளிநாட்டில் லட்சக்கணக்கில் சம்பளம்! வேலையை உதறிவிட்டு சட்டென ஊருக்கு வந்த இளைஞர்! யாருக்காக தெரியுமா?


The young man returned to his hometown for the elephant

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகன் கோவிந்தராஜ். இவர் பொறியியல் படிப்பு படித்தவர். இவர்கள் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக யானையை  வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கோவிந்தராஜ் வீட்டிலும் ஷயாமளா என்ற யானையை வளர்த்து வந்தனர்.

கடந்த 2003 - ஆம் ஆண்டிலிருந்து இந்த யானை கோவிந்தராஜ் வீட்டில் செல்லப்பிள்ளை போல வாழ்கிறது. சிறு வயதிலிருந்தே பள்ளி செல்லும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் யானையுடனே இருந்துள்ளார் கோவிந்தராஜ். ஷயாமளா யானை மீது அதிகம் பாசம் கொண்ட கோவிந்தராஜ் அந்த யானைக்கு தேவையான அனைத்தையும் செய்து வந்துள்ளார்.

elephant

இந்நிலையில் கோவிந்தராஜ் படித்து முடித்ததும் சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையத்தில் வேலை கிடைத்தது. யானை மீது அதிகம் பாசம் கொண்ட கோவிந்தராஜ் சவுதி அரேபியா சென்றதும், ஷியாமளாவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்துள்ளது, சரியாக சாப்பிடாமல் அமைதியாகவே சோகத்துடன் இருந்துள்ளது.

ஷியாமளாவின் நடவடிக்கை கவலையாக உள்ளது சரியாக சாப்பிடாமல் எப்போதுமே அமைதியாக உள்ளது என வீட்டார்கள் கோவிந்தராஜிடம் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தெரிந்த அடுத்த நிமிடமே யானையின் மீதான பாசத்தால், ஊருக்கு போக முடிவெடுத்து வேலையை உதறிவிட்டு கடந்தாண்டே தாய்நாடு திரும்பி விட்டார். கோவிந்தராஜ் மீண்டும் வந்ததை பார்த்து உற்சாகமடைந்த ஷியாமளா பழைய நிலைக்கு திரும்பிவிட்டதாம். மீண்டும் 49 வயதான ஷியாமளாவை பாசத்துடன் வளர்த்து வருகிறாராம் கோவிந்தராஜ்.