மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய சென்ற மின்வாரிய ஊழியருக்கு ஏற்பட்ட சோகம்.. கதறும் குடும்பத்தினர்..!



the-tragedy-of-the-electricity-worker-who-went-to-fix-t

திருவள்ளூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஏழுமலை. இவர் மாதவரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒயர் மேன் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் அதே மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பிரபு என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் சிஎம்பிஏ ட்ராக் டெர்மினல் பகுதியில் உள்ள மின்மாற்றி பழுது ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அதனை சரி செய்வதற்காக ஏழுமலை மற்றும் பிரபு ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அப்போது ஏழுமலை மின்மாற்றியில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் தாக்கி கீழே நின்று கொண்டிருந்த பிரபு மீது விழுந்துள்ளார்.

Electricity worker

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஏழுமலை உயிரிழந்தார்.

இதனையடுத்து இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.