தமிழகம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் காணாமல் போன நாய்.! தீவிரமாக தேடும் ட்ரோன் கேமரா.!

Summary:

புதுக்கோட்டை மாவட்டத்தில் காணாமல் போன நாய்.! தீவிரமாக தேடும் ட்ரோன் கேமரா.!

வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் நன்றியுள்ள ஜீவன்களாக மனிதர்களால் பார்க்கப்படுகிறது. இன்றளவும் பணக்காரர்கள் வீட்டு ஏ.சி. அறையிலும், ஏழை வீட்டுக் கொட்டகையிலும், செல்லப் பிராணியாக வீட்டில் ஒரு உறுப்பினராக நாய்கள் இருந்து வருகிறது. மேலும், வீட்டிற்கு காவலாகவும் நாய் இருந்துவருகிறது. எனவேதான் வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்த்தல் என்றவுடன் நாய் வளர்ப்பு மட்டுமே மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும்.

இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவரின் நாய் காணாமல் போனதால் நாயை டிரோன் கேமரா மூலம் தீவிரமாக தேடிவருகிறார் உரிமையாளர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காட்டுப்பட்டி ஊராட்சி வெள்ளையாண்டிபட்டியை சேர்ந்த செல்வின் அன்பரசு என்ற ஆசிரியர் ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய் வளர்த்துவந்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த 18-ஆம் தேதி மாலை அப்பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதில் அவர் வளர்த்த நாய் வீட்டில் இருந்து வெளியே ஓடியது. அந்த நாயின் கழுத்தில் செயின் அணிந்து இருந்ததால் வயல்வெளிகளில் செடி கொடிகளில் எங்காவது சிக்கியிருக்கும் என ஆசிரியர் மற்றும் அவரது உறவினர்கள் நாயை தீவிரமாக தேடி வந்தனர்.

ஆனால் எங்கு தேடிய அந்த நாய் கிடைக்கவில்லை. இந்நிலையில் நாயை எப்படியாவது கண்டுபிடிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர் ட்ரோன் கேமரா உதவியுடன் காட்டுப்பட்டி ஊராட்சியை சுற்றியுள்ள கிராமங்களில் ட்ரோன் கேமரா மூலம் நாயை தீவிரமாக தேடி வருகின்றார்.


Advertisement