தனிமையில் வாழ்ந்த இளம்பெண் செய்த காரியத்தால் அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்..!The relatives were shocked by what the lonely young woman had done

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் பகுதியில் உள்ள தென்றல் நகர் அருகேயுள்ள ரோஜா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி பூமாரி. இந்த தம்பதியினரின் மகள் தர்மதேவி (28). இவருக்கும் சோமையபுரம் பகுதியைச் சேர்ந்த சீதாராமன் என்பவருக்கும் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது.

தம்பதியினர் இருவரும் ஓராண்டு மட்டுமே சேர்ந்து வாழ்ந்த நிலையில், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தனது பெற்றோருடன் வசித்து வந்த தர்மதேவி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதை அரைத்து குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், அவரை மீட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, இராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ப்ரீத்தி. மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தர்மதேவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனை செய்த பின்பு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், தர்மதேவியும் அவரது கணவர் சீதாராமனும் கடந்த சில நாட்களுக்கு முன்பு  சந்தித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தர்மதேவி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.