கள்ளகாதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அரங்கேறிய கொலை சம்பவம்!,, மன உளைச்சலால் இளம்பெண் தற்கொலை முயற்சி..!the-murder-which-took-place-in-a-dispute-between-lovers

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள தட்டாஞ்சாவடி காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்தார். திருமணமான இவருக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவரை பிரிந்து வாழும் இளம்பெண் பூமிகாவுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

பூமிகாவுக்கு தன்னை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் அதே பகுதியை சேர்ந்த சுமன் என்பவருடனும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. சுமன் மற்றும் சக்திவேல் இருவருமே ஆட்டோ டிரைவர்கள். மேலும் இவர்கள் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் நன்கு அறிமுகமான நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவருடனும் இளம்பெண் பூமிகா நெருங்கி பழகியதுடன் மாறி மாறி இருவருடனும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இது கள்ளக்காதலர்கள் இருவருக்கும் தெரியவர, அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுமன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சக்திவேலை கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் குறித்து புதுப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சுமன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில், கொலை வழக்கில் தனது பெயர் சிக்கியதால் இளம்பெண் பூமிகா மன உளைச்சல் அடைந்துள்ளார். இதன் காரணமாக விரக்தியடைந்து விஷம் குடித்த பூமிகா, விழுப்புரம் செல்லும் பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். பேருந்து விழுப்புரத்தை நெருங்கிய நிலையில், அவர் மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

இதனையடுத்து பேருந்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததால் இளம் பெண் விஷம் குடித்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.