கோவிலுக்கு ஆசையாக சிறுமியை அழைத்து சென்ற தாய்மாமன்.. தாறுமாறாக வந்த கார் மோதி இருவரும் பலியான சோகம்.!



The mother-in-law who took the girl to the temple as a wish.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பாரதி நகரில் கண்ணன் தனது மனைவி மற்றும் மகள் திவ்யதர்ஷினியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திவ்யதர்ஷினி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் நடந்த அன்று சிறுமி திவ்யதர்ஷினி தனது தாய்மாமன் பாண்டியராஜன் என்பவருடன் பரமக்குடி ஐந்து முனை சாலை அருகேயுள்ள முருகன் கோயிலுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு பின்னால் தாறுமாறாக வந்த கார் திவ்யதர்ஷினி மற்றும் பாண்டியராஜ் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இருவரும் உயிரிழந்தனர்.

accident

இதனைதொடர்ந்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் திவ்யதர்ஷினி மற்றும் பாண்டியராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் பரமக்குடி வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் என்றும் அவர் மது போதையில் காரை ஓட்டியுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் காவல் துறையினர் விபத்து ஏற்படுத்திய ஞானராஜ் மீது வழக்கு பதிவிட்டு அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தில் சிறுமி மற்றும் தாய்மாமன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.