ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
சிறுமியிடம் சில்மிஷம்!.. தர்ம அடி கொடுத்த நரிக்குறவர்கள்!.. சிறுமியின் காலில் விழுந்து கதறிய வாலிபர்..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புறநகர் பகுதியில் பழங்குடியினரான நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் பகல் நேரங்களில் நாகர்கோவில் மாநகரில் பல்வேறு இடங்களில் வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கை நடத்தி வ்ருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக குடியிருப்புகள் இல்லாததால் இரவு நேரங்களில் வடசேரி பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் குடும்பம் குடும்பமாக தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வடசேரி பேருந்து நிலையத்தில் ஏராளமான நரிக்குறவர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். அங்கே 17 வயதுடைய சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் தூங்கி கொண்டு இருந்துள்ளார். அந்த சிறுமி குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்துள்ளார். அப்போது பேருந்து நிலையத்தில் குடிபோதையில் சுற்றித்திரிந்த நாகர்கோவில், கோட்டார் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர், சிறுமியின் அருகில் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த சிறுமி தூக்கம் கலைந்து அலறினார். இதனையடுத்து இளைஞர் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். அப்போது அருகில் தூங்கி கொண்டிருந்த நரிக்குறவர்கள் மற்றும் அங்கு பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். ஒரு கட்டத்தில் வலிதாங்க முடியாத இளைஞர் கதறி அழுதார். இதனை தொடர்ந்து அந்த சிறுமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட இளைஞர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடி மறைந்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.