குடித்துவிட்டு வந்து மனைவியை சித்ரவதை செய்த கணவர்... ஆத்திரத்தில் சரமாரியாக கத்தியால் குத்திய மனைவி...!The husband who came drunk and tortured his wife... the wife stabbed him with a knife in rage...

குடித்துவிட்டு வந்து தினமும் மனைவியை கொடுமை செய்த செய்த கணவரை ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை அருகேயுள்ள ஓழுகூர் கிராமத்தில் வசிப்பவர் ஏழுமலை (45). இவர் தனியார் பால் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (38). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் ஏழுமலை தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், குடித்து விட்டு வீட்டுக்கு வந்த ஏழுமலை குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். கலைச்செல்வி பணம் கொடுக்காததால் ஆத்திரத்தில் அவரை அடித்து உதைத்து தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த கலைச்செல்வி கத்தியால் கணவரின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஏழுமலையின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து கலைச்செல்வியை காவல்துறையினர் கைது செய்தனர். கணவனை மனைவி கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.