கொடூரத்தின் உச்சம்.. இறந்த மகனின் காப்பீட்டுத் தொகையை கேட்டு மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்..!The height of cruelty.. The husband brutally killed his wife asking for the insurance payment of his dead son..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சீ.கே மங்களம் திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர்கள்  குமார் - மகாதேவி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகளும் உள்ளனர். குமார் திருச்சியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இவரது மகன் உயிரிழந்துள்ளார்.

இதனால் மகனின் இறப்பிற்கான காப்பீட்டுத் தொகை மகாதேவியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பணத்தை தன்னிடம் கொடுத்துவிடும்படி குமார் மனைவி மகாதேவியை கடுமையாக தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் அதற்கு மகாதேவி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

Crime

இதனால் மனைவி மீது குமார் மிகுந்த ஆத்திரத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று திருச்சியில் இருந்து சொந்த ஊர் திரும்பிய குமார் மனைவியிடம் அந்த பணத்தைக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த குமார் மனைவியின் தலையை சுவற்றில் மோதி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இதனையடுத்து இவர்களது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்த மகாதேவியின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் மகாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.