தமிழகம் இந்தியா சினிமா

முதல் ஆன்லைன் தேசபக்தி திரைப்பட விழா இன்று தொடக்கம்! மொத்தம் 43 தேசபக்தி திரைப்படங்கள்! இடம்பெற்ற தமிழ் திரைப்படங்கள் என்ன தெரியுமா?

Summary:

The first online patriotic film festival

தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் சார்பில் முதல், ஆன்லைன் தேசபக்தி திரைப்பட விழா இன்று துவங்குகிறது. இந்த விழாவானது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டாடப்படும் என கூறப்படுகிறது.
இந்த தேசபக்தி திரைப்பட விழா  வரும் 21ந்தேதி வரை நடைபெறுகிறது. 

சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை குறிக்கும் வகையிலும் , இந்திய  சுதந்தர 
வரலாற்றை விளக்கும் வகையிலும் நடைபெறும் இந்த திரைப்பட விழாவை முன்னிட்டு நாள்தோறும் www.cinemasofindia.com என்ற இணையதளத்தில் பல இந்திய மொழிகளில் இருந்து தேசபக்தி படங்கள்  ஒளிபரப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சர் ரிச்சர்ட் அட்டன்பரோவின் காந்தி திரைப்படம் , தமிழில் மணிரத்னம் இயக்கிய ரோஜா மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட  43  திரைப்படங்கள் இணையதளத்தில் ஒளிபரப்ப பட உள்ளன. இந்திய பற்று உள்ள அனைவரும் இந்த திரைப்படங்களை காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Advertisement