இனியும் திமுக அரசு கோவை சம்பவத்தை; சிலிண்டர் வெடிப்பு என கூற முடியாது... அண்ணாமலை..!!

இனியும் திமுக அரசு கோவை சம்பவத்தை; சிலிண்டர் வெடிப்பு என கூற முடியாது... அண்ணாமலை..!!



The DMK government will continue the Coimbatore incident; Can't say cylinder explosion... Annamalai..!!

கோவை வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தை, சிலிண்டர் வெடிப்பு என திமுக அரசு கூற முடியாது என்று அண்ணாமலை கூறியுள்ளார். 

கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின் (28) என்பவர் கார் வெடித்து பலியானார். 

இந்த வழக்கில் அப்சர்கான் (23), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), முகமது தல்கா (25), முகமது நவாஸ் இஸ்மாயில் (27), பெரோஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர், சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த கார் வெடிப்பு வழக்கை, என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ; கோவை சம்பவத்தை சிலிண்டர் வெடிப்பு என இனி திமுக அரசு கூற முடியாது. ஏனெனில் என்.ஐ.ஏ இந்த சம்பவத்தை "வெடிகுண்டு வெடிப்பு வழக்கு" என்று கூறியுள்ளது. கடவுளின் கருணையால் கோவை மக்கள் காப்பாற்றப்பட்டனர். என கூறியுள்ளார்.