கழுத்தை நெரித்த கடன் சுமை.. தீக்குளித்து உயிரை மாய்த்த பெண்மணி.. விழுப்புரம் அருகே பரபரப்பு..!



The burden of debt that strangled her neck.. The woman who committed suicide by setting herself on fire.. There is excitement near Villupuram..!

விழுப்புரம் மாவட்டம் பாகர்ஷா பகுதியில் வசித்து வருபவர்கள் நரசிம்மன் -  தையல்நாயகி தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகும் நிலையில் மிகுந்த கடன் சுமையால் தம்பதி இருவரும் அவதிப்பட்டு வந்துள்ளனர். மேலும் தையல் நாயகி மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது‌

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மன உளைச்சலில் இருந்த தையல்நாயகி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தையல்நாயகியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

Burden of debt

இந்நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.