பார்க்கவே மனசு பதறுது!! பேருந்து சக்கரத்தில் சிக்காமல் நூலிழையில் தப்பிய இளைஞர்கள்.. வைரல் வீடியோ..
பைக்கில் இருந்து கீழே விழுந்தபோது பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் நூலிழையில் தப்பிய இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வைரலாகிவருகிறது.
தென்காசி மாவட்டம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. தனியார் பேருந்து ஒன்று குறுகலான சாலையில் சென்றுகொண்டிருந்தநிலையில், பேருந்துக்கு எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள், பேருந்தை பார்த்ததும் தங்கள் வாகனத்தை ஓரமாக திரும்பியுள்ளனர்.
அந்த பகுதியில் மழை பெய்து சாலை முழுவதும் ஈரமாக இருந்தநிலையில், இளைஞர்கள் தங்கள் வாகனத்தை ஓரமாக திரும்பியபோது திடீரென நிலை தடுமாறி பேருந்தின் சக்கரத்தின் அருகே விழுந்தனர். இருப்பினும் எந்த ஒரு காயமும் இன்றி இளைஞர்கள் இருவரும் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.
பைக்கில் சென்றபோது விபத்து... பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் நூலிழையில் தப்பிய இளைஞர்கள்..!#Tenkasi | #Bike | #Accident | #CCTV pic.twitter.com/kkCgL81xSt
— Polimer News (@polimernews) November 19, 2021