கடத்தல் தங்கத்தை கேட்டு இளைஞர் சித்ரவதை.. சென்னையில் 7 பேர் கும்பல் பரபரப்பு செயல்.!Thanjavur Man Tortured by 7 Man Gang Want Smuggling Gold Biscuit

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 25). இவர் துபாயில் வேலை பார்த்து வந்த நிலையி, கடந்த வாரம் சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில், பெருங்குடியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் செல்லப்பாவை சிகிச்சைக்கு அனுமதி செய்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

இதனால் சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் செல்லப்பாவிடம் விசாரணை நடத்தியபோது, 1 கிலோ தங்க கட்டிக்காக மண்ணடியில் உள்ள விடுதியில் சித்ரவதை நடந்தது அம்பலமானது.

thanjavur

செல்லப்பா கடந்த வாரத்தில் துபாயில் இருந்துள்ளார். அப்போது, அவரை சந்தித்த மர்ம நபர் ஒரு கிலோ தங்க கட்டியை கொடுத்துள்ளார். இதனை அகமதாபாத்தில் இருக்கும் நபரிடம் கொடுக்க வேண்டும் என்ற நிலையில், செல்லப்பா அதனை ஒப்படைக்கவில்லை. 

இதனையடுத்து, 7 பேர் கும்பல் சென்னை வந்து செல்லப்பாவை கடத்தி சென்று சித்ரவதை செய்துள்ளார். தங்கக்கட்டியை நண்பரிடம் கொடுத்துள்ளதாக செல்லப்பா கூற, ஆத்திரமடைந்த கும்பல் சரமாரியாக தாக்கியதில் அவரின் உடல்நிலை மோசமாகியுள்ளது. 

இதனால் அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்து தப்பி ஓடியது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, தங்க கட்டியை கொடுத்தவர் யார்? சித்ரவதை செய்த யார்? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.