அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை சடலம் மீட்கப்பட்ட விவகாரம்.. தாய் கைது.. பரபரப்பு தகவலால் அதிர்ச்சி.!

அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை சடலம் மீட்கப்பட்ட விவகாரம்.. தாய் கைது.. பரபரப்பு தகவலால் அதிர்ச்சி.!


Thanjavur Govt Hospital Baby Death Body Rescued Issue Mother Arrested

கழிவறையில் பச்சிளம் பிஞ்சின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பிறந்த பச்சிளம் பெண் குழந்தை கழிவறைக்குள் இருந்து பிணமாக மீட்கப்பட்டது. பிறந்த சிலமணிநேரமே ஆகிய பச்சிளம் சிசு, கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. மேலும், குழந்தை நீரில் மூழ்கி கொலை செய்யப்பட்டது விசாரணையில் உறுதியானது. 

thanjavur

இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மருத்துவக்கல்லூரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், மருத்துவமனையில் இருக்கும் கண்காணிப்பு காமிராவின் காட்சிகளையும் ஆய்வு செய்தனர். 

thanjavur

இந்நிலையில், குழந்தையை கொலை செய்த விவகாரத்தில், குழந்தையின் தாயான தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதலூர் பகுதியை சார்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்மணி கைது செய்யப்பட்டார். விசாரணையில், கள்ளக்காதல் காரணமாக பிறந்த குழந்தையை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.