பயங்கரம்..இரு சக்கர வாகனம் மீது மோதிய வேன்.. என்.எல்.சி ஊழியர் சம்பவ இடத்திலே பலியான சோகம்.!



Terrible.. Van collided with two-wheeler.. NLC employee died on the spot. Tragedy!

நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் உள்ள மெட்ராஸ் சாலையில் அருள்முருகன் தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அருள்முருகன் என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் நிரந்தர ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். 

இதனையடுத்து சம்பவம் நடந்த அன்று அருள்முருகன் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். அப்போது ஸ்டோர் ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அருள்முருகன் பின்னால் வந்த தனியார் வேன் அவர் மீது மோதியுள்ளது.

accident

இதில் அருள்முருகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிந்துள்ளார். இந்த சம்பவத்தை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து டவுன்ஷிப் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அருள்முருகன் உடலை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைதொடர்ந்து போலீசார் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தில் சிக்கிய என்.எல்.சி ஊழியர் சம்பவ இடத்திலே உயிர்யிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.