மதுரையில் பதட்டம்... பட்டியலின இளைஞருக்கு அரிவாள் வெட்டு.! சாலை மறியல்.! போலீஸ் குவிப்பு.!

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேவுள்ள திருமோகூர் கிராமத்தில் தலித் இளைஞர் வெட்டப்பட்ட சம்பவம் பதற்றத்தையும் பரபரப்பையும் உருவாக்கி இருக்கிறது. இது தொடர்பாக அப்பகுதியில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தின் ஒத்தக்கடை அடுத்துள்ள திருமோகூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்ற பட்டியல் இனத்தைச் சார்ந்த இளைஞரை திண்டியூர் கண்மாய் பகுதியில் வைத்து சங்கர் அஜய் மற்றும் சூரிய பிரகாஷ் உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியது.
ஏற்கனவே ஜூன் இரண்டாம் தேதி என்று இங்கு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விரைவாக கைது செய்ய வேண்டும் என கூறி இந்திரா காலனி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.