மத்திய சிறையில் இளைஞர் மரணம்... காவல்துறை அடித்துக் கொன்றதாக கூறி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்.!

மத்திய சிறையில் இளைஞர் மரணம்... காவல்துறை அடித்துக் கொன்றதாக கூறி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்.!



tenkasi-youth-died-under-police-custody-relatives-deman

தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர் சிறையில் மரணம் அடைந்ததை தொடர்ந்து  காவல்துறை தாக்கியதால்தான் அவர் மரணம் அடைந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட புளியங்குடி பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் தங்கசாமி (26) மற்றும் அவரது பாட்டி முப்பிலி மாடசாமி ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக கூறி  கைது செய்யப்பட்டனர். மேலும் தங்கசாமி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.

tamilnadu

அங்கு வைத்து அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் காவல்துறை தாக்கியதால்தான்  தங்கசாமி உயிரிழந்ததாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 100க்கும் மேற்பட்ட உறவினர்கள் புளியங்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போலீஸ் பற்றாக்குறையாக இருந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார். மேலும்  தங்கசாமியின் உறவினர்கள் புளியங்குடி பேருந்து நிலையத்திற்கு எதிரிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மதுரை திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.