ரூ.4 கோடி வரதட்சணையும் பத்தல.. 2 குழந்தைகளை தவிக்கவிட்டு பெண் தற்கொலை.. மணமான 5 ஆண்டுகளில் நேர்ந்த சோகம்.!Telangana Hyderabad Women Suicide Dowry Issue 

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், கஜூலராம பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ். இவரின் மனைவி அமராவதி. தம்பதிகளுக்கு கடந்த 2019 ம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்த அமராவதியின் பெற்றோர், திருமணத்தின்போதே ரூ.4 கோடி வரதட்சணை அளித்துள்ளனர். இதன்பின் தம்பதிக்கு 2 குழந்தைகளும் பிறந்துள்ளார். இந்நிலையில், சமீபகாலமாகவே கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்த அபிலாஷ் மற்றும் அவரின் பெற்றோர், குடும்பத்தினர் தொடர்ந்து அமராவதியை துன்புறுத்தி வந்துள்ளனர். 

ஒருகட்டத்தில் விரக்தியடைந்த பெண்மணி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலை கடிதத்தில் தனது குழந்தைகளை ஆசிரமத்தில் சேர்த்து படிக்க வைக்கவும் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

Telangana

மேலும், தனது பெயரில் உள்ள நகைகளை கணவர் வீட்டார் வைத்துள்ளதாகவும், அதனை மீட்டு விற்பனை செய்து இறுதிச்சடங்கு உட்பட செலவுகள் போக பிற பணத்தை அமெரிக்காவில் இருக்கும் சகோதரியிடம் வழங்க வேண்டும். கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெளிவுபட கடிதத்தை எழுதிவைத்து இருக்கிறார்.

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், பெண்ணின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிராக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.