மதுபோதையில் அண்ணாத்த படம் பார்க்க வந்த இளைஞர்கள்.! தியேட்டர் ஊழியர்கள் சொன்ன ஒத்த வார்த்தை.! கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்.!

மதுபோதையில் அண்ணாத்த படம் பார்க்க வந்த இளைஞர்கள்.! தியேட்டர் ஊழியர்கள் சொன்ன ஒத்த வார்த்தை.! கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்.!


Teenagers smashing theater glass

தீபாவளியை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படம் திரையிடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தியேட்டரில் தீபாவளி அன்று இரவு 5 வாலிபர்கள் ‘அண்ணாத்த’ படம் பார்க்க தியேட்டருக்கு மதுபோதையில் வந்துள்ளனர். 

அவர்கள் குடிபோதையில் இருந்ததால் தியேட்டர் ஊழியர்கள் அவர்களை தியேட்டருக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், தியேட்டர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் தியேட்டர் ஊழியர்களை தாக்கியுள்ளனர். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த வாலிபர்கள், தியேட்டரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். 

இதனையடுத்து தியேட்டர் ஊழியர்கள் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றபோது வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக தியேட்டர் நிர்வாகத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து தியேட்டரில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு அந்த வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.