தமிழகம்

பள்ளி மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த தமிழாசிரியர்! ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த மாணவி!

Summary:

teacher torture to student


திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் அரசு உதவி பெரும் பள்ளியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் பயின்று வருகின்றனர். மேலும், அப்பள்ளியில் படிக்கும் வெளியூரை சேர்ந்த மாணவ-மாணவிகள் அருகில் உள்ள தனியார் தொண்டு நிறுவன விடுதியில் தங்கியிருந்து பள்ளிக்கு வந்து செல்கிறார்கள்.

இந்த பள்ளியில் நாகர்கோவிலை சார்ந்த 52 வயது நிரம்பிய டேவிட் என்பவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வள்ளியூருக்கு அருகில்த ங்கி வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆசிரியர் டேவிட் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

டேவிட் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் ரீதியிலான தொல்லைகள் கொடுத்து வந்த நிலையில், மாணவி புகார் தெரிவிக்க பயந்து, ஆசிரியர் டேவிட் செயலை கண்டும் காணாமல் இருந்து வந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர் அந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி திருநெல்வேலி குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இவரின் தகவலை அறிந்த அதிகாரிகள் ஆசிட்டியாரிடம் ரகசிய விசாரணை நடத்தினார். விசாரணையில், ஆசிரியர் டேவிட் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதி மகளிர் காவல்துறையினர் அந்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.


Advertisement