தமிழகம்

வேற லெவல்! டாஸ்மாக் டோக்கனை கலர் ஜெராக்ஸ் எடுத்து 200 ரூபாய்க்கு விற்பனை.. 16 பேர் கைது!

Summary:

tasmac token sold by taking color zerox

கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்க வழங்கப்பட்ட டோக்கன்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து விற்பனை செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஊரடங்கு சமயத்தில் மதுபான கடைகளை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கோரி தமிழக அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

ஜெராக்ஸ் எடுத்த குடிகாரர்கள்

அதனை தொடர்ந்து இன்று தமிழகத்தில் சென்னை மற்றும் கொரோனா தொற்று இருக்கும் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மேலும் சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டி வாரத்தின் 7 நாட்களுக்கு என 7 வண்ணங்களில் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன.

ஒரு நாளைக்கு ஒரு கடைக்கு 500 டோக்கன் மட்டுமே விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளில் வழங்கப்பட்ட டோக்கன்களை ஒரு சிலர் கலர் ஜெராக்ஸ் எடுத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இதனை கண்டறிந்த போலீசார் 16 பேரை கைது செய்துள்ளனர்.


Advertisement