தமிழகம்

சென்னையில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்! அதிகாலையில் இருந்தே காத்திருந்த மதுபிரியர்கள்!

Summary:

tasmac opened in chennai

கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பின் கட்டுப்பபாட்டு பகுதிகள் மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்து டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது.

இந்தநிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று ஆகஸ்ட்
18 ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் எனவும், டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் எனவும், ஒரு கடையில் ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் மட்டும் வழங்கப்படும் எனவும், அறிவிக்கப்பட்டது. 

இந்தநிலையில் இன்று காலை 10 மணி முதல் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள  டாஸ்மாக் கடைகள் திறக்கபட்டது. இதற்கான பணிகள் நேற்றய தினத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் பல இடங்களில் இன்று அதிகாலை முதலே மது வாங்குவதற்காக காத்திருந்துள்ளனர் மதுபிரியர்கள். நீண்ட நாட்களாக  டாஸ்மாக் கடைகள் சென்னையில் திறக்கப்படாமல் இந்தநிலையில், சென்னையில் மீண்டும் மது விற்பனை  டாஸ்மாக் கடைகளில் தொடங்கியுள்ளது.


Advertisement