வசூலை வாரி குவித்த டாஸ்மாக் மது விற்பனை!! நேற்றுமட்டும் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா??

வசூலை வாரி குவித்த டாஸ்மாக் மது விற்பனை!! நேற்றுமட்டும் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா??


Tasmac collection in Tamil Nadu

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும்  ரூ.164.87 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில்  கொரோனா பரவல் அதிகமானதை அடுத்து  கடந்த மே மாதம் முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜூன் 21 ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் தமிழகம் முழுவதும் மீண்டும் டாஸ்மாக் கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட 27 மாவட்டங்களில் நேற்று நடந்த முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் சென்னை மண்டலத்தில் ரூ.42.96 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.49.54 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.33.65 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.38.72 கோடி என மொத்தமாக ரூ.164.87 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.