டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை.! அதிரடி உத்தரவு.!tasmac closed four days for election

தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலையடுத்து, அனைத்து மதுபானக் கடைகளும், மதுபானம் அருந்தும் கூடங் களும் ஏப்ரல் மாதம் 3 நாட்களும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ம் தேதியும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம்தேதியும் டாஸ்மாக் கடைகள் கடைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

tasmac

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், டாஸ்மாக் கடைகள், பார்கள் இணைந்த கடைகள் ஏப்ரல் 4ஆம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே இரண்டாம் தேதி மூடப்பட வேண்டும். 

மேற்குறிப்பிட்ட நாட்களில் மதுபானங்களை விற்பனை செய்யவோ, ஓரிடத்திலிருந்து வேறு இடங்களுக்கு கொண்டுச் செல்லவோ கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.