திருமண நாளில் தங்கையின் ஆசையை நினைவாக்கிய அக்காவின் நெகிழ்ச்சி சம்பவம்.!

திருமண நாளில் தங்கையின் ஆசையை நினைவாக்கிய அக்காவின் நெகிழ்ச்சி சம்பவம்.!


tanjore-sister-gave-the-statue-of-the-father-for-the-we

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் தொழிலதிபர் செல்வம். இவருக்கு கலாவதி என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். செல்வம் தனது முதல் இரண்டு மகள்களுக்கு திருமணம் முடித்த நிலையில் மூன்றாவது மகளின் திருமணம் நடைப்பெறுவதற்குள் எதிர்பாராத விதமாக கடந்த 2012 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் செல்வத்தின் கடைசி மகள் லட்சுமி பிரபாவுக்கும், கிஷோர் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் லட்சுமி பிரபா தனது திருமணத்தை பார்க்க தந்தை உயிருடன் இல்லையே என மனவேதனையுடன் இருந்துள்ளார்.

தங்கையின் சோகத்தை அறிந்த லண்டனில் மருத்துவராக பணிபுரியும் அவரது மூத்த சகோதரி புவனேஸ்வரி சுமார் 6 லட்சம் செலவில் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்திடம் சிலிக்கான் மற்றும் ரப்பரை கொண்டு தனது தந்தையின் முழு உருவ சிலையை வடிவமைத்துள்ளார்.

அந்த சிலையை புவனேஸ்வரி, நேற்று நடைப்பெற்ற தங்கையின் திருமண நிகழ்வில் காட்டி தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதனை பார்த்த லட்சுமி பிரபா ஆனந்த கண்ணீரில் முழ்கியதுடன், தனது தாயை தந்தையின் சிலை பக்கத்தில் நிற்க வைத்து ஆசிர்வாதம் வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.