தமிழகம்

இப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. பேருந்தில் சென்றவர்கள் மின்சாரம் பாய்ந்து மரணம்.. தஞ்சை அருகே நடந்த சோகம்.

Summary:

தனியார் பேருந்து மீது மின்சாரம் தாக்கியதில் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பேருந்து மீது மின்சாரம் தாக்கியதில் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து தஞ்சை நோக்கி கணநாதன் என்ற தனியார் பேருந்து புறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பேருந்து வரகூர் என்ற பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

சில மீட்டர் தூரம் பேருந்து சென்றபோது எதிரே லாரி ஒன்று வந்துள்ளது. குறுகிய சாலையில் எதிரே வந்த லாரிக்கு வழிவிடுவதற்காக பேருந்து ஓட்டுநர் பேருந்தை ஓரம் கட்டியுள்ளார், ஏற்கனவே சாலை விரிவாக்க பணிக்காக வேலை நடந்துவரும்நிலையில் அங்கு இருந்த சேறும் சகதியுமாய் இருந்த பகுதியில் பேருந்து உள்வாங்கியுள்ளது.

இந்நிலையில் சாலை ஓரமாக சென்றுகொண்டிருந்த உயிர் அழுத்த மின்சாரகம்பி பேருந்தின் மீது உரசியுள்ளது. இதில் பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததில், பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த கவிதா, நடராஜன், கல்யாணராமன் மற்றும் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் மூன்று பேர் இந்த விபத்தில் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிகிச்சை நடைபெற்றுவருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement