துணை முதல்வருக்கு எதிராக நீதிமன்றத்தில் திடீர் வழக்கு; பரபரப்பானது அரசியல் களம்

துணை முதல்வருக்கு எதிராக நீதிமன்றத்தில் திடீர் வழக்கு; பரபரப்பானது அரசியல் களம்


tamilnadu-wise-chef-minister-opannerselvam

தமிழக தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தியது தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமைச் செயலாளருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக தலைமைச் செயலகத்தில் அதிகாலை 3 மணி அளவில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டதாகவும் அதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டதாகவும்  திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார்.

ஆனால் இது தொடர்பாக துணை முதல்வர் தரப்பிலிருந்து தலைமைச் செயலகத்தில் யாகம் நடைபெறவில்லை பூஜை மட்டுமே நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆனூா் ஜெகதீசன் என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில், தலைமைச் செயலகம் உட்பட அரசு அலுவலகங்களில் மதம் தொடா்பான விழாக்கள் நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் துணைமுதல்வா் அலுவலகத்தில் கோவில் கட்டி யாகம் நடத்திய பன்னீா் செல்வம் மற்றும் யாகத்திற்கு அனுமதி வழங்கிய கிரிஜா வைத்தியநாதன் ஆகியோா் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதாக குறிப்பிட்டு அவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.