தமிழகம்

தமிழகத்தில் 15 ஆயிரத்தை தாண்டியது கொரோனா..! இன்று ஒரே நாளில் 759 பேர் பாதிப்பு.! உயிரிழப்பு நூறைக் கடந்தது..!

Summary:

Tamilnadu todays corono postive case updates

தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனாவின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் இன்றுமட்டும் தமிழகத்தில் மேலும் 759  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்து 15,512 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று மட்டும் தமிழகத்தில் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 363 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் இதுவரை மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது.


Advertisement