இந்தியாவில் வேகம் எடுக்கும் ஒமைக்ரான்.! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா.? அதிர்ச்சி தகவல்.!



tamilnadu theird place in omicron

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போதுவரை அழிந்தபாடில்லை. கொரோனாவை எதிர்த்து அனைத்து நாடுகளும் இன்றுவரை போராடிக்கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் இருந்து இன்னும் நீங்கவில்லை.

கொரோனா 2 வது அலையால் பெரிய இழப்புகளை சந்தித்த இந்தியா, கொரோனா 3 வது அலையில் இருந்து தப்பிக்க கடும் முன்னேற்பாடுகளை செய்துவரும்நிலையில், ஒமைக்ரான் என்ற புதியவகை கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது.

இந்தியா முழுவதும் ஒமைக்ரான் வைராசல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் பதிப்பில் இந்தியாவில் தமிழகம் 3 வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 65 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டு முதல் இடத்திலும், டெல்லியில் 64 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டு இரண்டாவது இடத்திலும், தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டு மூன்றாவது இடத்திலும் உள்ளது.