அடுத்தடுத்து தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சி.. ஹோட்டலில் உணவுகளின் விலை கிடுகிடுஉயர்வு. நடுத்தர வர்க்கத்தினர் சோகம்.!  Tamilnadu hotel food Price High 

 

மின் கட்டண உயர்வு, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வு காரணமாக தங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை கருத்தில் கொண்டு, ஹோட்டல் உரிமையாளர்கள் உணவுகளின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

அதேபோல, சமையல் எரிவாயு விலையையும் சுட்டிக்காண்பித்துள்ள உணவக உரிமையாளர்கள், மதிய உணவு விலையை ரூபாய் 100-லிருந்து ரூ. 150 வரையிலும் உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

Tamilnadu hotel

மேலும், காய்கறி, பருப்பு போன்றவற்றின் விலையை பொறுத்து, உணவகத்தில் விற்கப்படும் பிற பொருள்களின் விலையும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகளை நம்பி தினப்பிழைப்பை நகர்த்தி வரும் பலரும் சோகமடைந்துள்ளனர். 

தற்போது மழையின் காரணமாக வரத்து குறைந்து காய்கறிகளின் விலை அதிகமானாலும், வரத்து அதிகமானதும் அவற்றின் விலை குறையும். ஆனால், ஒருமுறை உயர்த்தப்பட்ட கட்டணம் மீண்டும் குறைந்ததாக பதிவுகள் இல்லை என்பதே நிதர்சனம்.