தமிழகம்

தமிழ்நாட்டில் கொரோனோவின் தற்போதைய நிலை என்ன.? காலையிலையே நல்ல செய்தி சொன்ன சுகாதாரத்துறை அமைச்சர்.!

Summary:

Tamilnadu health minister announce importance update about corono

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 70 கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவி உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து தற்போதுவரை 40 கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டுவருகிறார். அவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழகத்தில் கொரோனா நிலை குறித்து பதிவிட்டுல அமைச்சர், தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகத்தின் பேரில் பரிசோதனை செய்யப்பட்ட அனைவருக்கும் கொரோனா இல்லை என தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.


Advertisement