ஏழைகளின் வங்கிக் கணக்கில் ரூ.2000 செலுத்தப்படுமா? தேர்தல் ஆணையத்தில் திமுக மனு.!

ஏழைகளின் வங்கிக் கணக்கில் ரூ.2000 செலுத்தப்படுமா? தேர்தல் ஆணையத்தில் திமுக மனு.!



tamilnadu gvt rs.200 - dmk report election commition.

கஜா புயல் பாதிப்பு மற்றும் போதிய மழையின்மையால் தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூபாய் இரண்டாயிரம் நிதி உதவி அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று சமீபத்தில் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், தமிழக தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் மாவட்டத்திற்கு ஒருவா் வீதம் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவிக்கான வங்கி சான்றிதழை வழங்கி முதல்வா் பழனிசாமி திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். 

dmk

கணக்கெடுப்புகளின் அடிப்படையில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 2 ஆயிரம் ரூபாய் நிதி தொடா்ந்து செலுத்தப்படும். குடும்ப தலைவியின் வங்கி கணக்கிலேயே இந்த சிறப்பு நிதி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரிப்பதற்காக ஆளும் கட்சியினர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிறப்பு நிதி உதவி ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் ஆர்.எஸ் பாரதி மனு தாக்கல் செய்துள்ளார்.