அசுர வேகத்தில் பரவும் குரங்கு அம்மை.! தமிழக சுகாதாரத்துறை விடுத்த முக்கிய உத்தரவு.!

அசுர வேகத்தில் பரவும் குரங்கு அம்மை.! தமிழக சுகாதாரத்துறை விடுத்த முக்கிய உத்தரவு.!


tamilnadu-government-increase-surveilance-to-control-mo

குரங்கு அம்மை தொற்று பிரிட்டன், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல நாடுகளிலும் அதிக அளவில் பரவி வருகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் வலி, களைப்பு, உடல் அரிப்பு, தோலில் புள்ளிகள், கொப்புளங்கள் ஆகியவை இந்நோய்க்கான அறிகுறிகள். இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை தொற்று நுழையவில்லை.

Monkeypox

ஆனாலும் பல நாடுகளில் பரவி இருப்பதால் இந்தியாவில் பரவுவதை தடுக்க பல வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கையில், உடலில் தடிப்புகள், கொப்புளங்கள் இருப்பவர்கள், குரங்கு அம்மை பரவியுள்ள நாடுகளுக்கு கடந்த 21 நாட்களுக்கு முன் சென்று வந்தவர்கள், குரங்கு அம்மை  உறுதி செய்யப்பட்டவர்கள், அதற்கான அறிகுறிகள் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரை கண்காணித்து தனிமைப்படுத்த வேண்டும்.

மேலும் உடலில் தடிப்புகள் இருந்தால் அது நீங்கி புதிய தோல் உருவாகும் வரை, மருத்துவர் தெரிவிக்கும்வரை தனிமையில் இருக்க வேண்டும். மேலும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு அந்த நபர்களின் தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.