வெஸ்ட் நைல் வைரஸ் பரவல்.! தமிழக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதார துறை!!tamilnadu-government-alert-to-people-about-vest-nail-vi

வெஸ்ட் நைல் நோயால் 2022 ஆம் ஆண்டு 47 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் கேரளாவில் வைரஸ் பெருமளவில் பரவி வருகிறது. ஆலப்புழா, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பரவல் பெருமளவில் காணப்படுகிறது.

வெஸ்ட் நைல் வைரஸ் 

இந்நிலையில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் பறவைகளிடமிருந்து கொசுக்களுக்கும், கொசுக்கள் மூலமாக மனிதர்களுக்கும் வெஸ்ட் நைல் வைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் ‘க்யூலெக்ஸ்’ வகை கொசுக்களால் மனிதர்களுக்கு பரவுகிறது.

இதையும் படிங்க: இனி ரேஷன் கடைகளில் இதனை விற்பனை செய்யக்கூடாது... தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

வைரஸ் அறிகுறிகள் 
இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவர்களில் 80 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் தென்படுவதில்லை. எலைசா, பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலமே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியலாம். காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும்.

சுற்றுப்புற தூய்மை 

தமிழகத்தில் தற்போது வரை வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் என்பது கண்டறியப்படவில்லை. மனிதர்கள் மூலம் இந்த வைரஸ் பரவும் தன்மை கிடையாது. ஆனாலும் கொசுக்கள் மூலம் பரவுதலை கட்டுப்படுத்த சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கவாதம், கழுத்து விரைப்பு, மூளைக்காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பேருந்துகளில் இதற்கு அனுமதி இல்லை.! மீறினால் கடும் நடவடிக்கை.! தமிழக அரசு எச்சரிக்கை!!