தமிழகம் Covid-19

சார்.! தயவு செஞ்சு ஒருநாளாவது கேப் குடுங்க ப்ளீஸ்.! கெஞ்சி கேட்ட இளைஞர்.! உடனே ஏற்பாடு செய்த முதல்வர்.! நெகிழ்ச்சி சம்பவம்.

Summary:

Tamilnadu CM respond to twitter user query

ஐயா, தயவு செஞ்சு ஒருநாளாவது கேப் குடுங்க. எனது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் நான் எனது மனைவியுடன் இருக்கவேண்டும், துணைக்கு கூட ஆள் இல்லை. பாஸ் அப்பளை பண்ணியும் பலன் இல்லை என முதல்வருக்கு இளைஞர் ஒருவர் டிவிட் செய்ய, உடனே பதிலளித்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார் தமிழக முதல்வர்.

இதுகுறித்து அந்த இளைஞர் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "சார்.. தயவு செஞ்சு ஒரு நாளாவது கேப் குடுங்க ப்ளீஸ். என் மனைவி ப்ரெக்னெண்டா இருக்கா. 9 மாசம். அவள்கூட யாருமே இல்லை. தனியா அவ எப்படி சமாளிப்பா? 108 க்கு கால் பண்ணனும்னா கூட பக்கத்துல யாரும் இல்லை. ஊரடங்கு காரணமா நான் பக்கத்துக்கு மாவட்டத்தில் மாட்டிகிட்டேன், இது என் மனைவிக்கு முதல் பிரசவம், நான் பாஸ் அப்ளை பண்ணியும் பதில் இல்லை. எனக்கு உதவி செய்யுங்கள் என கேட்டிருந்தார்.

உடனடியாக தங்களை தொடர்புகொள்ள தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும் தம்பி. நிச்சயமாக தாயையும், சேயையும் பாதுகாக்க தேவையான அணைத்து உதவிகளையும் அரசு செய்துகொடுக்கும் என முதல்வர் பதிலளித்துள்ளார்.

முதல்வரின் பதிலை சற்றும் எதிர்பார்த்த அந்த நபர், முதல்வருக்கு நன்றி தெரிவித்ததோடு, நான் ஊருக்கு செல்ல பாஸ் கிடைத்துவிட்டதாகவும், உங்களோட பிஸியான இந்த வேலைல எனக்கு பதிலளித்தது ரொம்ப பெருமையா இருக்கு. ஒரே ஒரு கோரிக்கை ஐயா, இந்த மாதிரி இக்கட்டான நிலைமையில் இருக்குற எல்லோருக்கும் பாஸ் கொடுக்கணும்னு கேட்டுக்குறேன் எனவும் அந்த நபர் பதிலளித்துள்ளார்.

இணையவாசி ஒருவரின் கோரிக்கைகைக்கு முதல்வர் பதிலளித்தது மட்டும் இல்லாமல், உடனே நடவடிக்கை எடுத்து அந்த இளைஞருக்கு உதவி செய்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement