அரசியல் தமிழகம்

சசிகலா வெளியே வந்தாலும் இது தான் நடக்கும்.! மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.!

Summary:

சசிகலா விடுதலையானதும் அதிமுக ஆட்சி நீடிக்காது என ஸ்டாலின் கூறியதற்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாதரை ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அங்கு நடந்த மக்கள் கிராம சபை கூட்டததில் திமுக தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், தற்போது நடக்கும் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலன் மீது எவ்வித அக்கறையும் இல்லை. விவசாயிகள் பிரச்சனையை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. சசிகலா வெளியே வந்தவுடனே அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும். வரும் 27-ஆம் தேதி சசிகலா வெளியே வரும்போது அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என தெரிவித்திருந்தார். 

அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மக்களின் குறைகளை கேட்கும் ஸ்டாலின், ஆட்சியில் இருந்தபோது ஏன் எதுவும் செய்யவில்லை. பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் அதை ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும். சசிகலா விடுதலையானதும் அதிமுக ஆட்சி நீடிக்காது என ஸ்டாலின் கூறியதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிச்சாமி, ஜனவரி 27-ஆம் தேதிக்கு பின்பும் என்னுடைய ஆட்சி நிச்சயம் இருக்கும் என தெரிவித்தார்.


Advertisement