#BigBreaking: 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.. தமிழகத்திலேயே மிகப்பெரிய..! - தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

#BigBreaking: 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.. தமிழகத்திலேயே மிகப்பெரிய..! - தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு..!



tamilnadu-cm-mkstalin-announce-employment-ranipet-slipp

இராணிப்பேட்டையில் நடைபெற்ற 71 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்., 

"குழந்தைகளின் கோரிக்கைகளை பெற்றோர்கள் நிறைவேற்றுவர். அதனைப்போல, தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் மக்களிடம் கோரிக்கைகளை பெற்று விரைவில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மக்களுக்கு பல திட்டங்களை அரசு நிறைவேற்றி தருகிறது.

tamilnadu

தோல் & காலனி உற்பத்தியில் இராணிப்பேட்டை மாவட்டம் சிறந்து விளங்குகிறது. இராணிப்பேட்டை பணப்பாக்கத்தில் ரூ.400 கோடி செலவில் 250 ஏக்கர் பரப்பில் மெகா காலனி உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும். அமைச்சர் துரைமுருகனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நேற்று காட்பாடியில் சிப்காட் தொழிற்சாலை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த காலனி தொழிற்சாலை பூங்காவால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைக்கும்" என்று பேசினார்.