ஆஹா! என்ன ஒரு கவிதை..! தமிழ்நாட்டின் நிலையை நாளே வரியில் சொன்ன தமிழிசைtamilisai as a poetry

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் நிலையை பற்றி கூறியுள்ளார்.

அரசியலில் எப்பொழுதும் பரபரப்பாக செயல்பட்டு வரும் தமிழிசைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் சிகாகோ நகரில் "இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்" என்ற விருது வழங்கப்பட்டது. சிகாகோ நகரில் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டபின், சிகாகோ,வாஷிங்டன் தமிழ்ச்சங்கம்,அமெரிக்கவாழ் தமிழ் பாஜக  நண்பர்களுடன் கலந்துரையாடல்  நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பாஸ்டன் நகரில் தமிழ் நண்பர்களை சந்தித்து விட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் சென்னை வந்தடைந்தார் தமிழிசை.

tamilisai as a poetry

தமிழகத்திற்கு வந்து அடைந்ததும் மீண்டும் பரபரப்பான அரசியல் களத்தில் சுறுசுறுப்பாக செயல்பட துவங்கி உள்ள தமிழிசை பட்டாசு வெடிப்பதில்  காலநிர்ணயம், சிலை திருட்டு முயற்சி, சபரிமலை தொடர்பான விவகாரம், நீட் தேர்வு போன்றவைகளை பற்றி தொடர்ந்து கருத்துக்களை கூறி வருகிறார். மேலும் நேற்று திடீரென நடிகர் விஜய்யின் சர்க்கார் படம் பற்றியும் விஜய்யை பற்றியும் விமர்சித்தார்.

இந்நிலையில் நேற்று மாலை தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் வெடி வெடிக்க தடை செய்யப்படுகிறது ஆனால் குடிப்பதற்கு தடை; வெடி வெடிப்பதற்கு கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இங்கு இத்தனை கோடிக்கு மது விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.