தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா..



Tamil Nadu today coronaa cases live report

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும் 23,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா 3 வது அலை இந்தியா முழுவதும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

corona

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தமிழ்நாட்டில் இன்று ஒரு நாளில் 1,36,559 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 23,975 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,39,923 ஆக உயர்ந்துள்ளது.  வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து மொத்தம் 1,42,476 பேர் கொரோனா பாதித்து தற்போது சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 12,484 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.