தமிழகம் Covid-19

உடனே இ-பாஸ் பெற இனி இதை செய்தால் போதும்..! நாளை முதல் அமலுக்கு வரும் புது இ-பாஸ் வழிமுறைகள்..!

Summary:

Tamil Nadu new rules for applying E pass

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் இ-பாஸ் விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெறவேண்டும் என அறிவிக்கப்பட்டது. திருமணம், மருத்துவ சிகிச்சை, நெருங்கிய உறவினரின் இறப்பு மற்றும் பணி சம்பந்தமான காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.

இந்த நடைமுறையால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் இ-பாஸ் வழங்குவதில் அரசு அதிகாரிகள் முறைகேடு செய்வதாகவும், அவசர தேவைகளுக்கு கூட இ-பாஸ் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும் மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்நிலையில் இ-பாஸ் நடைமுறையில் புது தளர்வுகளை அறிவித்து சமீபத்தில் புது வழிமுறைகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதன்படி இ-பாஸூக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆதார் அல்லது குடும்ப அட்டையுடன் செல்போன் எண்ணை பதிவு செய்தால் உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும் எனவும், இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இனி இ-பாஸ் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் எனவும், மக்கள் தேவையற்ற காரணங்களுக்காக இ-பாஸ் பெற்றுக்கொண்டு பயணம் செய்வதை தவிர்க்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement