தமிழகம்

மீண்டும் முடங்கும் சென்னை..! சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு..! தமிழக அரசு உத்தரவு..!

Summary:

Tamil Nadu lock down latest update

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்து சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. அதேநேரம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் பலமடங்கு அதிகரித்துவருகிறது. மேலும் சமீபகாலமாக தமிழகத்தில் உயிரிழப்புகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் ஜூன் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு சற்று முன் அறிவித்துள்ளது. காய்கறி கடைகள், மளிகைக்கடைகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை பார்சல் மட்டும் தரலாம் எனவும், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் ஆகியவை வழக்கம்போல் செயல்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement