வெளுத்து வாங்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

வெளுத்து வாங்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?



Tamil Nadu latest rain update

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமான மழை பெய்துவருகிறது. இந்நிலையில் வடமேற்கு வங்க கடல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் கேரளா, தெற்கு கர்நாடக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain update

மேலும் இதன் விளைவாக தமிழகத்தில் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மற்றும் அதன் போக்கு காரணமாக தமிழகத்தில் மேலும் ஒருசில மாவட்டங்களிலும் மிதமானது முதல் கனமான மழை இருக்க கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமானது முதல் கனமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.