தமிழகம் Covid-19

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் இத்தனை பேர் மரணம், இவ்வளவு பாதிப்பா.? இன்றைய கொரோனா நிலவரம்.!

Summary:

Tamil Nadu latest corona case update report

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் புதிதாக 5,950 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து அன்றாட நிலவரம் மற்றும் பாதிப்பு விவரங்கள் குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை அறிவித்துவருகிறது. அந்த வகையில் இன்று வெளியான தகவலின்படி தமிழகத்தில் புதிதாக 5,950 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,196 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,38,055 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் தமிழகம் முழுவதும் இன்று மட்டும் 125 (அரசு மருத்துவமனை - 86, தனியார் மருத்துவமனை - 39) பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறைவெளியிட்ட  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5,766 ஆக உயர்ந்துள்ளது.

இன்று சற்று ஆறுதலாக ஒரேநாளில் 6,019 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனனர். 2,78,270 பேர் இதுவரை தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Advertisement