நாமதான் நம்பர் ஒன்!! வேதனைப்படவேண்டிய தகவல்!! சிரிக்கவும், சிந்திக்கவும்வைக்கும் வைரல் மீம்ஸ்!

இந்தியளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் முதல் இடம் என தகவல் வெளியானதில் இருந்து பல்வேறு மீம்கள் இணையத்தில் வெளியாகிவருகிறது.
இந்தியாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நாள் ஒன்றுக்கு 33 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் நாட்டில் அதிக கொரோனா பாதிப்பு ஏற்படும் மாநிலங்களில், நமது தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவிலையே தமிழகத்தில்தான் அன்றாட பாதிப்புகள் அதிகமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.