மாணவர்களே... மாதம் 7 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை உதவித்தொகை! முழு தகவல் உள்ளே!
உயரிய குடிமைப் பணிகளில் தமிழ்நாட்டின் பங்கெடுப்பை அதிகரிக்கும் நோக்கில், அரசின் முக்கிய அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகளுக்குத் தீவிரமாக தயாராகும் இளைஞர்களுக்கு மீண்டும் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஊக்கத்தொகைத் திட்டத்தின் விவரம்
இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வாகும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.7,000 வீதம் பத்து மாதங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகைத் திட்டம் பொருளாதார தடைகளைத் தாண்டி மாணவர்கள் முழுமையாகப் படிப்பில் கவனம் செலுத்த உதவுவதாக கருதப்படுகிறது.
யார் விண்ணப்பிக்கலாம்?
யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தமிழக மாணவர்கள், வட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் இந்த சலுகைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், அவர்களது பெற்றோர் அரசுப் பணியில் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாதந்தோறும் ரூ. 1500 வழங்க... தமிழகம் முழுவதும் நாளை(நவ..20) அனைத்து பள்ளிகளுக்கும் அரசு வெளியிட்ட அவசர அறிவிப்பு.!
கூடுதல் நிதி உதவி
முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறுவோருக்கு ரூ.50,000 என கூடுதல் ஊக்கத்தொகையும் அரசால் வழங்கப்படுகிறது. இது மாணவர்களுக்கு கூடுதல் ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் ஜனவரி 14-ம் தேதி முதல் யுபிஎஸ்சி தேர்வுக்கான விண்ணப்பங்கள் தொடங்க உள்ள நிலையில், தகுதியுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். சரியான வழிகாட்டலும் அரசின் நிதி ஆதரவும் இணைந்தால், தமிழகத்திலிருந்து மேலும் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உருவாகும் என்ற நம்பிக்கை வலுப்பெறுகிறது.
இதையும் படிங்க: ஹாப்பி நியூஷ்! 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10,000.... தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!!!