தமிழகம் Covid-19

தமிழகத்தில் 50,000-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு..! இன்று மட்டும் 2,174 பேருக்கு கொரோனா உறுதி..!

Summary:

Tamil Nadu corono positive case crossed 50 thousands

தமிழகத்தில் இன்று மட்டும் 2,174 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டநிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்காட்டுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்துவரும் நிலையில் இன்றுமட்டும் 2,174 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,193 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 27,624 பேர் கொரோனாவில்  இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 576 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்றும் மட்டும் 48 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement